Wednesday, October 31, 2018

என் பயணம்...!


காற்றோடு காற்றாய் 
போகும் வரை உன் நினைவுகளோடு தான் 


நெற்பயிர்கள்...!

நான் தலை குணிந்தேன்...!

விவசாயிகள் தலை நிமிர்ந்து 
நடக்க வேண்டும் என்று...!



வெட்கத்தில் நாம் காதல்...!


குடை பிடிக்கிறாய் 
நீ எனக்கு!
நனைந்து விட்டதாய் 
துடைத்து விடுகிறேன் 
 நான் உனக்கு! 
வெட்கத்தில் பூக்கத்
தொடங்கியது 
நாம் காதல்...!


உன்னிடம் இழக்கிறேன்...!


உன்னிடம் பேசும் ஒவ்வொரு நிமிடமும் 
என்னையே நான் மறக்கிறேன்....! 

உன்னிடம் பேசாத ஒவ்வொரு நிமிடமும் 
உன்னை நான் இழக்கிறேன்....!




இதயங்கள் தூரமானது...!

இணையத்தின்
இணைப்பில்,
இதயங்கள்
தூரமானது...!




Tuesday, October 30, 2018

மழை நேரத்தில்...!


ஒரு மழை நேரத்தில்..
சிறிய
குடைக்குள் 
நாமிருவரும்
நனையாமல் 
இருப்பதற்காக

ஒருவரையொருவர் 
மிகவும் 
நெருக்கமானோம்.

நம்மை இவ்வளவு
அழகாக 
சேர்த்து வைத்த

இந்த 
காதல் மழைக்கும்,
குடைக்கும்
நன்றி
சொல்லியபடியே.


நேசத்தின் நிழல்...!


நேசத்தின் நிழலுனக்குப்
பீடித்த பெருவியாதியெனக்
கருணைக் கொலை செய்ய
எத்தனிக்கிறாய் ;

உன்
சொற்களின் சூட்டில்
அர்த்தங்கள் உருகி
அந்திமத் திட்டுக்களாயின;

இதயந் திரிக்காது
மோனச் சுடரொன்று ஏற்றிப்பார்;

அங்கே 
அகம்பாவக் கோணல்கள் செதுக்கும்,
உளியுனக்குக் கிடைக்கலாம்.



அழகு...!


உன்னை இறுக்கி கட்டிய அந்த  சேலையை 
எண்ணி தான் கோபம் 
மத்தபடி பட்டு ஜரிகை 
உனக்கு அவ்வளவு அழகு...!




Thursday, October 25, 2018

தேன் உதடு...!


பள்ளத்தாக்குகளையும்,
மேற்குத்தொடர்ச்சி மலைகளையும்
கடந்து....

கடைசியாக பீடபூமியில் கண்டறிந்தேன்
சுத்தமான ( கலப்படமில்லாத) 
தேனை...
உதடு...



நிழலும் நிஜமும்...!


உயிரணைத்து 
செல்லும், 
நிழல் நீ.. 
உனை சேராமல் 
வாழ்தல் உணரா
நிஜம் நான்...




காதலிசம்...!


ஏன்னென்று 
சொல்ல அறியேன் என் மனம் 
என்னவோ உன்னை கேட்கின்றது
காதலிசம்...!


உன் நினைவு...!


ஒரு கரையில் உன் நினைவு
மறு கரையில் உன் கனவு
இக்கரைக்கு அக்கரைப் பச்சையென
நீந்தித் தவிக்கும் உயிர்...



இதழில் திலகம்...!


நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு இதழில் திலகம்...



Wednesday, October 24, 2018

அனாதைக் கனவுகளாய்...!


உன்னால் கைவிடப்பட்ட
நினைவுகள்
உறக்க வீதியெங்கும்
அலைகின்றன
அனாதைக் கனவுகளாய்...!


என் அன்பே..!!!


உன் 
நினைவுகளுடன்
நான் அமைதியாக
இருக்கையில்,
நீ ஏன் என்னை
கஷ்டப்படுத்தி 
வேடிக்கை 
பார்க்கிறாய்..!!!
என் அன்பே..!!!




இரவினை களவாடி...!


இரவினை  
களவாடிவிட்டு
அதிகாலை எழுந்ததும் 
ஏன் உறங்கவில்லை என
சண்டை பிடிப்பாள்
அவள் 
அதுவும் காதலே...!




காயங்களாகவும் நீ...!


என் மனதில் 
காதலாய்
மட்டும் அல்ல,,
காயங்களாகவும்
நீ தான்
வாழ்கிறாய்...!!


Tuesday, October 23, 2018

மனக்கவலை...!


ஓராயிரம் முறை பேசி 
வரும் மகிழ்ச்சியை விட
சிறிது நேரம் பேசாமல் 
வரும் மனக்கவலைகளுக்கு
வலிமை அதிகம்



தாய் மகள் உறவு...!


கற்று தருகிறார் என்பதும்  புரியாது 
கற்றுக் கொள்ளுவதும் புரியாது 
தாய் மகள் உறவு...!



ஒரு தலை காதல்


என் வாழ்க்கையில் என்னையே
"மறந்து நான் நேசித்த ஒரு
'ஜீவன் என்றால் அது நீ மட்டும்
தான்...




Monday, October 22, 2018

ஏழ விவசாயி..!

அன்னாந்து பாத்துப் பாத்து 
ஆறேழு வருசாச்சி! 
இன்னும் காத்திருக்கோம், 
ஈரம் கண்ணில் கூடயில்ல. 
உண்ண சோறுண்டா? 
ஊத்தெடுக்கும் நீருண்டா? 
எட்டுவழிச் சாலயில, 
ஏத்தந்தான் இங்குண்டா? 
ஐயா! ஆட்சியரே! 
ஒய்யாரக் கோட்டையரே! 
ஓலம் இடுகின்றோம்! 
உங்காதில் கேட்கலயா? 
பயணம் வெரசாகப் 
பயிர்நிலத்த பரிக்காதீக! 
வயல வளச்சிப்புட்டு 
வளர்ச்சினு தான் மழுப்பாதீக! 
சயிரன் வச்ச வண்டி, 
சர்க்காரு ஓட்டும் வண்டி, 
நீட்ட டேப்பெடுத்து 
நிலம் பிரிக்க வந்துருக்கே! 
பயிரு வச்ச நிலம்! 
புல்டோசர் ஏறயிலே, 
வயிறு எரியுதய்யா! 
வயிட் கோட்டுப் போட்டவரே! 
ஏழ விவசாயி 
ஏதேதோ உளறிப்புட்டேன்! 
என்னையும் துரோகியினு 
சிறக்குள்ள அடச்சிடுங்க!



கலையாத மேகம்...!

காற்றடித்தும்
கலையாத மேகம்...
நீர் குடித்தும்
தணியாத தாகம்...
புண்ணகைத்தும்
பிரியாத சோகம்...
மாற்றங்கள்
மாறாமலிருக்க
நீ இன்றி எப்படி
அடங்கிடும் என் மோகம்.


கவிதை செய்து விளையாடுகிறேன்...!

மழை நேரங்களில்
காகிதத்தில் கப்பல் செய்து
விளையாடுகிற
குழைந்தை மாதிரி
உன் நினைவு நேரங்களில்
கவிதை செய்து
விளையாடுகிறேன்...






Sunday, October 21, 2018

ஒன்றே பார்வை ...!


உன் பார்வை ஒன்றே போதுமடி
என் ஆயுள் குறைவதற்கு


ஏர்பூட்டும் இனத்தவன்...!

கார்முகில் கசிந்திடும் 
கண்ணீரில் வாழ்ந்தவர் 
பார்முகம் மலர்ந்திடும் 
பசுமையை வளர்த்திடும் 
ஆர்வலர், அழுகையை 
அறிந்தவர் யாருண்டு? 

நிலமுண்டு நீரில்லை 
குலமுண்டு சோறில்லை 
வளமென்று ஏதுமில்லை 
இருப்பினும் இவனோ 
பசித்தவன் புசித்திட 
இராப்பகலாய் உழைத்தவன்... 

பசுமை, 
வளர்த்திட நினைத்தவன் 
வாழ்கையைத் தொடர்ந்திட 
வழியென வகுத்திட 
வந்தவன் அவனோ! 
கல்லில் கண்டிடும் 
கடவுள் போலவன் 
கண்முடிப் போகிறான்... 

ஆளும் முன் அசைந்தவன் 
ஆளுகையில் அசந்தவன் 
அயல்நாடு புகுகிறான் 
காலமது மாறுமென 
நாளும் கனா கண்டவரும் 
கற்சிலை போலுமொரு 
வாழ்வியல் காணுகிறான்.... 

வாழும் சந்ததி 
வீழும் ஓர்தேதி 
வருமென நினைத்தவன் 
கருவினை கலைத்தவன் 
மானிடம் அழியும் 
ஓர்செயல் செய்கிறான்..... 

நான், 
யாரிடம் சொல்லிட 
வாய்மூடி வாழ்கிறேன் 
ஏர்பூட்டும் இனத்தவன் 
கயிற்றின் முனையில் 
கல்லறை காண்கிறேன்...... 




உன் அழகை கண்டு...!

உன் அழகை கண்டு நீயே மழைத்துபோய் !
உன் கண்ணங்கள் மீது 
உன் கைகளை வைத்துக்கொண்டாயா  ?



மெய்அழகு...!

பெண்மை
போற்றாது
பெண்னினம்

பொறாமை
மட்டுமே
கொள்ளும்

காரணம் "மெய்அழகு"...



Saturday, October 20, 2018

மனதில் தோன்றுவது நீ...!

நிலவு மலர்களிடமோ
நதிகள் மலைகளிடமோ
வண்டுகள் சோலையிடமோ
இத்தனை ஏன்..
யார் யாரிடம் அன்பைச் சொன்னாலும்
மனதில் தோன்றுவது
நீ.


விவசாயி...!


இயற்கையின் உற்ற தோழன்... 
விளைநிலத்தை முழுமையாய் நேசிக்க தெரிந்தவன்... 
அனைவரின் பசியாற்றும் வள்ளலவன்... 
உழைக்க மட்டுமே தெரிந்த உத்தமன்... 
விதைகளை விளைய வைக்கும் வித்தை தெரிந்தவன்... 
நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பண்பாளன்... 
கடன் வாங்கியேனும் கடமையை செய்பவன்... 
நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவன்... 
நன்றி எதிர்பாராமல் நன்மை செய்பவன்... 
கண்ணீர் சிந்தினாலும் உழவை தொடர்பவன்...



உன் விழிகளில்...!

ஈர்ப்பு விசையை
உன் விழிகளில்
கண்டேன்..,
காந்தமாய் 
என் இதயத்தை 
கட்டி ஈர்த்து விட்டது
உன் காந்த விழி பார்வை..
உயிரே...


ஊனும் நீ...! உயிரும் நீ...!

முகம் வெள்ளை தாள்...
அதில் முத்தத்தால்...
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே...
இதழ் எச்சில் நீர்... 
எனும் தீர்த்ததால்... 
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே...
கண்கள் நீயே... 
காற்றும் நீயே... 
தூணும் நீ... 
துரும்பில் நீ... 
வண்ணம் நீயே.. 
வானும் நீயே.. 
ஊனும் நீ.. 
உயிரும் நீ.. 





உழவன் வலி...!

மாடுதான் வீடுங்கற
சேறுதான் சோறுங்கற
பயிர்தான் உயிருங்கற
அரிசிதான் அரசிங்கற
நெல்லுதான் சொல்லுங்கற
உன் நெலமதான் கவலைங்கறேன்...
பட்டினி போடு
படியேறு
படிச்சவன விட
வெதச்சவன்தான்
ஒசந்தவன்னு காட்டுங்கறேன்...




என்னில் தேடுகிறேன் உயிரே...!

நித்தமும் 
உன்னை 
என்னில் 
தேடுகிறேன் 
என் 
தேடலின் 
முடிவிலாவது
உன்னில்
என்னை 
உணர,,
விரைவில் 
உணர்ந்து
என்னுயிரை
உன்னுயிருடன்
சேர்த்து விடு...
உயிரே...!


Friday, October 19, 2018

உன் நினைவுகளோடு...!


உனக்கு 
ஏதும் தொல்லை 
கொடுக்காமல்
உன்
நினைவுகளோடு
செல்கிறேன்..!!!
ஏன் என்னை 
கொள்ளாமல்
கொள்கிறாய் 
கனவிலும்
என்னை 
உதாசினப்படுத்தி..!!!
என் உயிரிலும் உயிரானவனே..!!!



கனவுகாதல்...!

கண்டதும் காதலை அவளை கண்ட நொடி உணர்ந்தேன் 

கண்களால் காதல் செய்யும் கல்நெஞ்சுகாரி அவள் ..!!

கனவுகாதல்...!
என் ராட்சசி...!



கோபக்கணைகள்...!


என்னவளம்மு 
தவறு செய்துவிட்டு 
மழலையாக சிரிக்கிறாள்,

என் கோபக்கணைகள் 
கவிதையாக்கப் படுகின்றன!


மகளதிகாரம்...!


கோடியதை
கொட்டி
கொடுத்தாலும்
அவள்
கொட்டிய
சிரிப்புக்கு
ஈடுல்லையே.....


Wednesday, October 17, 2018

நீ வருவாய் என...!


என்னை நீ
பார்த்தும் 
பார்க்காமல்
செல்கிறாய்..!!!

அது தெரிந்தும் 
தெரியாதது
போல் இருக்கிறேன்..!!!

என்றாவது 
ஒரு நாள்
என் அன்பை 
புரிந்து கொண்டு
என்னைத் தேடி
நீ வருவாய் என..!!!
காத்திருக்கிறேன்..!!!



விரைக்த்தி...!


அவனுக்கு
என்னை மட்டும் தான்
பிடிக்கவில்லை
எனக்கோ என்னை
அவன்  நேசிக்காத
இந்த  உலகத்தில் உயிர்
வாழவே பிடிகவில்லை...!



அவளதிகாரம்...!


தட்டுத்தடுமாறி
தடம் மாறி போகாமல் 
தடுமாறி உந்தன் 
மடியில் வீழ்ந்துவிட்டேனடி...




அவள் கண்ணீர்...!


யார் உடைப்பது என்ற தயக்கத்தில் நகரும் 
ஊடல் கணங்களில்
இழுத்து பிடித்து 
மடியில் இருத்திய 
அடுத்த நொடி
மார்பில் சாய்ந்து
உடைந்து அழும் 
அவள் கண்ணீர் 
மொத்தமாய் நனைக்கிறது 
காதலால்
என்னை...!


கனவுகாதல்...!

வண்ண பட்டாடை
உடுத்தி 
எங்கு செல்கிறாய்
உன்னை தொட்டாட
வேண்டி அனுமதி 
கேட்டால் 
என்னை விட்டோடவே 
ஏன் முயற்சி செய்கிறாய்
அழகியமாறனின் காதலி...!
என் ராட்சசி...!
கனவுகாதல்...!




Tuesday, October 16, 2018

என் அன்பே..!!!


உன் 
நினைவுகளுடன்
நான் அமைதியாக
இருக்கையில்,
நீ ஏன் என்னை
கஷ்டப்படுத்தி 
வேடிக்கை 
பார்க்கிறாய்...
என் அன்பே...!




நினைக்கும் நொடிகள்...!


நினைக்கும்
நொடிகள் யாவும்,
கண்ணம் நனைக்கும்
என் கண்களுக்குத் 
தெரியும்...
அவளை சுமக்கும் 
மனதினில் கணக்கும்
நிமிடங்கள், துணைக்கு
வரும் என என் தனிமைக்குத் தெரியும்...
இன்று அவளால் தான்
அகம் வெந்து, இடுகாட்டிற்கு இறையானேன் என 
ஏன் அவளுக்குத் தெரியவில்லை...!




நீள நதிக்கரை...!


பேசாமல் நீளும் நம் மௌனம்..
உன் கார்மேகக் கூந்தலில் ஒற்றை ரோஜா..
இவைகளோடு சேர்ந்து காத்திருக்கிறது 
நமக்கான காதல்...




உன் நினைவுகள்...!


நதியாய் 
உன் 
நினைவுகள் 
இருந்தும்
உன் 
மனமெனும்
கடலலையில்
எப்போது
சங்கமிப்பேன்
வெறும் 
நினைவலைகளில்
மட்டுமே
வாழ்க்கை
நகர்ந்துக்
கொண்டிருக்கிறது



Thursday, October 11, 2018

கனவுகாதல்...!


என்னவளின் 
மடி கிடைக்ககும்யென்றால்...!

நான் குழந்தையாக 
கூட மாற ஆசை தான்...!







அவள் வருகையை எதிர்நோக்கி...!


விழிகள் இரண்டும் வீதியை       
      நோக்கி நோட்டமிட்டன!!!

அழகி அவள் வருகையை
        எதிர்நோக்கி!!!!



நீயும் நானும்...!

நீயும் நானும்
நீரும் நெருப்பும்.

நீ அனைக்க
அடங்கிடுவேன்.

எனை நீ நீங்கினால்
அலைவாய் ஆவியாய்.

நீ இல்லா
உலகினில் நானும்
அலைவேன் பாவியாய்...



பசுமை...!


எனக்காக எப்படியெல்லாம்
இருக்கிறாய் நீ!
என்ற வியப்பிருந்தாலும்,
நான் அப்படியெல்லாம்
இருப்பதில்லை;

அதனாலேயே நம் நாட்கள்
இருக்கின்றன
சலிப்புறாத பசுமையில்.