Saturday, December 29, 2018

விடியலை வெறுக்கும் பனிப்போர்வை....

வெளிச்ச கீறல்களற்ற
விடிந்திடா பொழுதுகள்....
விடிந்ததாய் பறக்கும்
கிண்ணரக்கூட்டங்கள்.....

விடியலை வெறுக்கும்
பனிப்போர்வை....
கதகதப்பாய் இழுத்து போர்த்திய
இதமான போர்வை போராட்டம்
எத்தனை இதமானது
இந்தமார்கழி......

நெஞ்சுக்குள் விண்ணப்பமின்றி
எப்பொழுது வந்தமர்ந்தாய்......
சில்லிட்ட மழைச்சாரலாய்
வெப்பம் தணிக்கும் இளவேனில் பறவையாய்....

இதயத்தைப் பிளந்து
இடி இடியாய் இடிப்பவளே .....
உனது வரவு மழையாய்
எனது மகிழ்வு மண்ணாய்.....

யுக யுகமாய் எனக்கு
உறவெனநீ வேண்டா....
ஒரு நொடிப்பொழுது
உன் பார்வை போதும்...

வெண்ணிற மலர்களுக்கு
அந்தி மாலை விடுதலை
அடுத்திருக்கும் மலர்களுக்கு
அதிகாலைதானே விடுதலை....

தாழம்பூ நான்
மின்னலாய் வெட்டித்தொலை....
மலர்ந்து கொள்ளட்டும் இந்த தாழம்பூவும்....





Saturday, December 22, 2018

அழகைத் தேடும் கண்களுக்கு

அழகைத் தேடும் கண்களுக்கு
அன்பு தெரிவதில்லை..

அன்பைத் தேடும் கண்களுக்கு
அழகு தேவையில்லை..


இறுதிவரை


இறுதிவரை
உன் மூச்சுக்காற்றை மட்டுமே
சுவாசித்து வாழ்ந்திட வேண்டும்..
உன் மூச்சு நின்ற அடுத்த கணமே
என் உயிரும் எனை விட்டுப்
பிரிந்திட வேண்டும்..!


வசந்த காலம்

முதல் பார்வை
முடிவுறா தேடல்
கடந்திடும் இரவுகள்
விடிந்திடும் பொழுதுகள்

மார்கழிப் பனி.....
நெஞ்சு உதறும் குளிர்
யோசிப்பின் உச்சம்..
நீயிருந்ததால் நிலைமை மோசம்

விடுதலை வேண்டிவிரல்கள்.....
வெந்நீர் வேண்டி நாக்கு....
ஆக்சிஜன் கேட்டு இதயம்...
திறக்க இயலா விழிகள்.....

முல்லைப் பூ நாசி
மல்லிகையின் மணம்
சந்தனக் காற்று
வெளியேற விடவில்லை
கதவுத் தாழ்.....

வாழ்க்கையில் வசந்தங்கள்
எப்பொழுதாவது தான்
வாசல் வருகின்றன
நீ உள்ளே அனுமதிக்கிறாய்
நான் அனுமதிப்பதே இல்லை...

உன்னை விடுத்து எனக்கென்று
ஒரு வசந்தம் என் வாசல் 
வருமா சொல்...


Thursday, December 13, 2018

Wednesday, December 12, 2018

உறங்காத உரிமைகள்......!

முன் பனிக்காலம்
மார்கழி இரவு.....
நடுநிசி நடுக்கம்
உறங்கும் ஊன்
உறங்காத உரிமைகள்......!

உறக்கத்திலிருந்து நீ எழுவதாய் இல்லை
உரிமையை நான் விடுவதாய் இல்லை...
நான் துறவு நிலை போக
உன் தூக்கமும் காரணம்......!

சொத்துக்காரி
என்றுனை எனக்கு 
க(கா)ட்டி வைத்தார்கள்...
உன் உதட்டோர புரட்சி 
ஓராயிரம் கோடி .....

எத்தனை இருந்தும் 
என்ன பயன்....
உறங்கி கிறங்கடிக்கிறாய்
நான் விழித்து இறந்திருக்கிறேன்

சில தாஜ்மகால்கள்
மும்தாஜ் பார்த்து ரசிக்க அல்ல.... 
ஷாஜகான் பார்த்து அழ....
நினைவுச் சின்னம் நிகழ்வுக்கு இல்லை
மஞ்சளும் குங்குமமும்
மாங்கல்யக்காரி உனக்குத்தானோ....
மன்னவன் எனக்கில்லையோ........

தென்னை நட்டு தின்றாருண்டு
பனை நட்டு பலன் பெற்றார் உண்டா......
பார்த்தே கிடக்கிறேன்
பலன் கிட்டுமா என....

எழில் சுலா......



Monday, December 10, 2018

நட்பு

ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
என் நண்பனுடன்
வாழ்வதற்கு..!!!


Wednesday, December 5, 2018

நிலை மறந்து


உன் அருகே நெருங்கி வரும் 
போது மட்டும் என் நிலை மறந்து 
போகிறது ஏனே



துளி நம்பிக்கையில்


உனக்கான மழையில் 
என்றுமே 
நனைந்து போகிறது 
என் காதலின் ஈரங்கள் 
நீ துவட்டுவாயென்ற 
துளி நம்பிக்கையில்...!!




Tuesday, December 4, 2018

உயிர்நாடி ஒரு நிமிடம் சிலிர்க்கிறது அம்மா, Amma,

நீ ஆளும் வரை.....
ஏன் நீ வாழும் வரை கூட ....
யாரும் ஆடவில்லை....
பாடவில்லை..
அதுவே உன் ஆளுமை.....திறமை......