Thursday, July 18, 2019

உயிராய் இருக்கிறாய்...


உள்ளம் என்ற இடத்தில், 
உன் நினைவு மறையும்போது,
நான் இறந்து போகிறேன்,
ஏன் தெரியுமா????😔😔😔😔😔
என்னுள் நீ நினைவாக அல்ல 
உயிராய் இருக்கிறாய்....❤❤❤❤❤


நான் அனுபவிக்கும் இந்த வலி...


மருந்தே இல்லாமல், 
நினைவினாலே கொல்லும், 
தனிமையை தேடும், 
உலகையே வெறுக்கும்படி அவன் எனக்கு பரிசாக அளித்த
உயிர் கொல்லி நோய் தான்
நான்
அனுபவிக்கும் இந்த வலி 😔

உன்னிதயத்திலும் உன்னினைவிலும்...


வேறென்ன வேண்டி
நிற்க போகிறேன்
முழுதாய் எனையேற்று
உன்னிதயத்திலும், 
உன்னினைவிலும்
என்னையே 
நினைத்துருகி
என்மேல்காட்டிடும்
அவ்வன்பை மட்டுமே😍😍😍😍

உன் வாழ்க்கை...


உன் மனமானது 
உயர்ந்ததாக
இருந்தால் மட்டுமே
உன் வாழ்க்கை
உயர்வாக இருக்கும்

ஆசை...


நீ சிரிக்கின்ற போது 
உனக்கு பின்பாகவும்,
நீ அழுகின்ற போது
உனக்கு முன்பாகவும்,
நீ நடக்கின்ற போது 
உனக்கு பக்கமாகவும்,
என்றுமே இருக்க 
ஆசையாகத்தானிருக்கிறது❤❤❤

Thursday, April 25, 2019

நீ நிலவல்லவா

புகைப்படத்தில் 
உன் அரை முகம்
தெரிந்தாலும் அதையும்
ரசிக்கிறேன்
பிறை என்றாலும்
நீ நிலவல்லவா...



Tuesday, April 23, 2019

இதயம்...

உன்னை நேசிப்பதற்கு இதயம் 
உன் அழகை காண கண்கள் 
என் சுமைகளை இறக்க தோள்கள் 
அதுவும் நீயாக இருந்தால்... 
இதயம் மட்டும் அல்ல 
என் உயிரையும் கொடுப்பேன்....


காதல்...

பெண்களின் காதல் பூவிலுள்ள 
பனித்துளி போல அழகானது...
ஆண்களின் காதல் வேரில் 
உள்ள நீரைப்போல ஆழமானது...


Friday, April 19, 2019

கரைந்து போகிறேன்...

உன் விரல்கள்👆 
என்னை தொடும் ஒவ்வொரு நொடியும் வெயிலில்🌞 
கரைந்து போகும் பனித்துளியாய்🌬 🌨
நான் கரைந்து போகிறேன்..🌊😊


காத்திருந்த என் விழிகள்...

ஒவ்வொரு நொடியும் உனக்காய்😍 
காத்திருந்த என் விழிகள் 👀
இன்று பல மணிநேரமாய் 
உறக்கத்திற்காக காத்திருக்கிறது, 
கண்ணீரோடு...



Friday, April 12, 2019

என் நினைவின் முடுக்கெல்லாம் நீதான்...


உன்னை சுற்றும் துளசி மாடங்களையும்...
ஊடல் நிறைந்த திண்ணைகளையும்... 
அடர்வெயில் சோலைகளையும்... 
ஆடைதுறந்த பெருவெளிகளையும்... 
அணைத்துக்கொண்டு கிடக்கிறேன்... 
என் நினைவின் முடுக்கெல்லாம் நீதான்... 


என் வாழ்வில்...



அன்பின் உருவம்
உன்னிலிருந்தே
தொடங்கியது
என் வாழ்வில்...



அவளதிகாரம்


உன் முகம் காணா நாள்

பௌர்ணமியும்

அம்மாவாசை ஆனதே...


Tuesday, April 9, 2019

மகளதிகாரம் கவிதைகள்

என் அம்மா 
எனக்கு சூட்டிய பெயர் 
எத்தனை அழகானது 
என்பதை..,

என் மகள் 
என்னை அழைக்கையில் 
உணருகிறேன்...


Monday, April 8, 2019

நினைவூட்டல்


என்னுடன் நீ அறிமுகமான புதிதில்  எப்படி பழகினாய் 
என்பதை நினைத்துப் பார் 
நீயே வெறுத்துக் கொள்வாய் 
உன் செயலை எண்ணி..!



Thursday, March 28, 2019

உயிர் நனைத்தும்...

மூங்கில் காடென கிடப்பவளே
காற்றின் தேகத்தில்
உயிர் நனைத்தும்
இறுக்கம் சூழுமென்
வெறுமையின் பிடியை தளர்த்தி
முகாரிபாடும் மனதை சற்று ஆற்றுப்படுத்தேன்...




Saturday, March 9, 2019

ஈகோ காதல் கவிதை


எனக்கும் அவளுக்கும் .... 
உயிர் பிரியும்வரை .... 
காதல் பிரியாத காதல் .... 
இருக்கிறது .....!!! 

அவளூக்கு ஏதும் நடந்தால் .... 
நான் இறந்து பிறப்பேன் .... 
எனக்கு ஒன்றென்றால்.... 
அவளும் இறந்து பிறப்பாள்.....!!! 

நாம் ஒருவரை ஒருவர் .... 
சந்திக்கும்போது ..... 
கீறியும் பாம்புமாய் .... 
இருப்போம் -காதல் 
நகமும் சதையும்போல் 
இனிமையாய் இருக்கும் ....!!! 

Thursday, March 7, 2019

உண்மைக் காதல்


ஒருமுறை பிறந்தேன்
உலகை காண்பதற்கு அல்ல
உன் அழகை காண்பதற்கு....

ஒருமுறை வளர்ந்தேன்
இளமை காலத்திற்கு அல்ல
உன் வருகை காலத்திற்கு....

ஒருமுறை தவித்தேன்
இசையை கேட்பதற்காக அல்ல
உன் குரலை கேட்பதற்காக....

பலமுறை துடித்தது
என் இதயம்
உயிர் வாழ்வதற்காக அல்ல
உன்னோடு வாழ்வதற்கு...

நீ இன்றி நானும் இல்லை...

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமா…வருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?

விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஓ..

நட்பு

"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்



Wednesday, February 20, 2019

இதழ்ரசம்....

சுளைப்பிரித்து
கவ்விக்கொண்ட
பொழுதுகளில்
உன் இதழ்ரசம்
என் உயிர்முடிச்சுகளில்
மடக்கு மடக்காய்
இறங்கக்கண்டேன்...


Monday, January 21, 2019

நீயும் நானும் எதிரிலுமில்லை... எதிரியுமில்லை...

கார்த்திகை மழைக்கும்
மார்கழி பனிக்கும்
சிறந்து பிறந்தவளே....
பனி ஈரமாய் இருப்பது வரம்
உன்னோடு பாவ விமோசனமாய்
நானிருப்பது சாபம்......?!

முன்னிரவில் பயிர் செய்து
பின்னிரவில் அறுவடை செய்யும்
சிறந்த விவசாயி நீ.....
நீ மூலதனம் போட்டது
என் முன்னெற்றியில் இருந்துதான்...

இருண்டு கிடக்கும் இரவினில்
இடைவெளியில்லா பெருமூச்சு நான்
எனது பருவ பார்வைகள்
உன் சிறு வெளிச்சம் தேடியபடி.....

மானிடப் பிறவியின்
மகத்தான தத்துவமே
நீ என்னை வென்று கொன்று விடு
நான் போராடி தோற்றுக் கொள்கிறேன்....

இரவின் போரில்
யார் வென்றிட கூடும்.....
இருவரும் தான்....
ஏகாந்த சிக்கலில் சிக்கிய படி....
இளகி உயிர் கசிந்த படி....

அடப் போ
அடுத்த போர் வர ஆண்டு ஆகும்...
அதுவரை
நீயும் நானும்
எதிரிலுமில்லை...
எதிரியுமில்லை...


Tuesday, January 8, 2019

தூர்...



வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக்கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

                 -    நா. முத்துக்குமார்.