One side love, tamil kadhal kavithai, kadhal kavithai, love quotes, தமிழ் கவிதை, Tamil Kavithaigal, Arivumathi Kavithaigal, Thamarai Kavithaigal, Vairamuthu Kavithaigal, Vaali Kavithaigal, Kannadasan Kavithaigal
Wednesday, October 31, 2018
வெட்கத்தில் நாம் காதல்...!
குடை பிடிக்கிறாய்
நீ எனக்கு!
நனைந்து விட்டதாய்
துடைத்து விடுகிறேன்
நான் உனக்கு!
வெட்கத்தில் பூக்கத்
தொடங்கியது
நாம் காதல்...!
Tuesday, October 30, 2018
Thursday, October 25, 2018
Wednesday, October 24, 2018
Tuesday, October 23, 2018
Monday, October 22, 2018
ஏழ விவசாயி..!
அன்னாந்து பாத்துப் பாத்து
ஆறேழு வருசாச்சி!
இன்னும் காத்திருக்கோம்,
ஈரம் கண்ணில் கூடயில்ல.
உண்ண சோறுண்டா?
ஊத்தெடுக்கும் நீருண்டா?
எட்டுவழிச் சாலயில,
ஏத்தந்தான் இங்குண்டா?
ஐயா! ஆட்சியரே!
ஒய்யாரக் கோட்டையரே!
ஓலம் இடுகின்றோம்!
உங்காதில் கேட்கலயா?
பயணம் வெரசாகப்
பயிர்நிலத்த பரிக்காதீக!
வயல வளச்சிப்புட்டு
வளர்ச்சினு தான் மழுப்பாதீக!
சயிரன் வச்ச வண்டி,
சர்க்காரு ஓட்டும் வண்டி,
நீட்ட டேப்பெடுத்து
நிலம் பிரிக்க வந்துருக்கே!
பயிரு வச்ச நிலம்!
புல்டோசர் ஏறயிலே,
வயிறு எரியுதய்யா!
வயிட் கோட்டுப் போட்டவரே!
ஏழ விவசாயி
ஏதேதோ உளறிப்புட்டேன்!
என்னையும் துரோகியினு
சிறக்குள்ள அடச்சிடுங்க!
Sunday, October 21, 2018
ஏர்பூட்டும் இனத்தவன்...!
கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?
நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...
பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...
ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....
வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்தவன்
கருவினை கலைத்தவன்
மானிடம் அழியும்
ஓர்செயல் செய்கிறான்.....
நான்,
யாரிடம் சொல்லிட
வாய்மூடி வாழ்கிறேன்
ஏர்பூட்டும் இனத்தவன்
கயிற்றின் முனையில்
கல்லறை காண்கிறேன்......
Saturday, October 20, 2018
விவசாயி...!
இயற்கையின் உற்ற தோழன்...
விளைநிலத்தை முழுமையாய் நேசிக்க தெரிந்தவன்...
அனைவரின் பசியாற்றும் வள்ளலவன்...
உழைக்க மட்டுமே தெரிந்த உத்தமன்...
விதைகளை விளைய வைக்கும் வித்தை தெரிந்தவன்...
நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பண்பாளன்...
கடன் வாங்கியேனும் கடமையை செய்பவன்...
நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவன்...
நன்றி எதிர்பாராமல் நன்மை செய்பவன்...
கண்ணீர் சிந்தினாலும் உழவை தொடர்பவன்...
Friday, October 19, 2018
Wednesday, October 17, 2018
Tuesday, October 16, 2018
Thursday, October 11, 2018
Subscribe to:
Posts (Atom)