Sunday, November 18, 2018

வருவதாய் சென்றாய்....

வருவதாய் சென்றாய்....
   வந்ததாய்  தெரியவில்லை
   தந்து சென்றதெல்லாம்
   வந்து வாங்கிச் செல்,.....

   நொடி ஒவ்வொன்றும்
   யுகமாய் தீர்கிறேதே
   சென்ற வழி பார்த்து
   காத்திருப்பும் சுகமாயிற்று

   தீயினும் சூடாய்....
   நீராவியின் வெப்பமாய்
   உஷ்ணமாய் உன் மூச்சு
   என் தோள் பட்ட
   காயம் நீ தோள் சாய்த்தலால் தான்
    மறையும் ....
   
  எல்லோருக்கும்  வரும்
  இரவு பகல் எனக்கின்றி போனதேனோ...
  எப்பதா நீ  வருவே...
  ஏந்திழை நூலிழை யாகும் முன்
  வந்து வென்று விடு...

   வாசல் வைத்து கட்டிய
   என் அப்பன் வஞ்சகன் தான்
   வான் பரப்பே வழி என இருந்தால்
   நீ வரும் அழகு பார்த்திருப்பேன்

    மறக்காமல் வந்து விடு
    என்  மெளனங்கள்
    கண்ணீராவதற்குள்....

    வாழ்ந்து விட வேண்டும்
    அந்த ஒரு நொடியாவது.....
    அது தான் மரண வாழ்க்கை....

No comments:

Post a Comment