முன் பனிக்காலம்
மார்கழி இரவு.....
நடுநிசி நடுக்கம்
உறங்கும் ஊன்
உறங்காத உரிமைகள்......!
உறக்கத்திலிருந்து நீ எழுவதாய் இல்லை
உரிமையை நான் விடுவதாய் இல்லை...
நான் துறவு நிலை போக
உன் தூக்கமும் காரணம்......!
சொத்துக்காரி
என்றுனை எனக்கு
க(கா)ட்டி வைத்தார்கள்...
உன் உதட்டோர புரட்சி
ஓராயிரம் கோடி .....
எத்தனை இருந்தும்
என்ன பயன்....
உறங்கி கிறங்கடிக்கிறாய்
நான் விழித்து இறந்திருக்கிறேன்
சில தாஜ்மகால்கள்
மும்தாஜ் பார்த்து ரசிக்க அல்ல....
ஷாஜகான் பார்த்து அழ....
நினைவுச் சின்னம் நிகழ்வுக்கு இல்லை
மஞ்சளும் குங்குமமும்
மாங்கல்யக்காரி உனக்குத்தானோ....
மன்னவன் எனக்கில்லையோ........
தென்னை நட்டு தின்றாருண்டு
பனை நட்டு பலன் பெற்றார் உண்டா......
பார்த்தே கிடக்கிறேன்
பலன் கிட்டுமா என....
எழில் சுலா......
No comments:
Post a Comment