Thursday, March 28, 2019

உயிர் நனைத்தும்...

மூங்கில் காடென கிடப்பவளே
காற்றின் தேகத்தில்
உயிர் நனைத்தும்
இறுக்கம் சூழுமென்
வெறுமையின் பிடியை தளர்த்தி
முகாரிபாடும் மனதை சற்று ஆற்றுப்படுத்தேன்...




Saturday, March 9, 2019

ஈகோ காதல் கவிதை


எனக்கும் அவளுக்கும் .... 
உயிர் பிரியும்வரை .... 
காதல் பிரியாத காதல் .... 
இருக்கிறது .....!!! 

அவளூக்கு ஏதும் நடந்தால் .... 
நான் இறந்து பிறப்பேன் .... 
எனக்கு ஒன்றென்றால்.... 
அவளும் இறந்து பிறப்பாள்.....!!! 

நாம் ஒருவரை ஒருவர் .... 
சந்திக்கும்போது ..... 
கீறியும் பாம்புமாய் .... 
இருப்போம் -காதல் 
நகமும் சதையும்போல் 
இனிமையாய் இருக்கும் ....!!! 

Thursday, March 7, 2019

உண்மைக் காதல்


ஒருமுறை பிறந்தேன்
உலகை காண்பதற்கு அல்ல
உன் அழகை காண்பதற்கு....

ஒருமுறை வளர்ந்தேன்
இளமை காலத்திற்கு அல்ல
உன் வருகை காலத்திற்கு....

ஒருமுறை தவித்தேன்
இசையை கேட்பதற்காக அல்ல
உன் குரலை கேட்பதற்காக....

பலமுறை துடித்தது
என் இதயம்
உயிர் வாழ்வதற்காக அல்ல
உன்னோடு வாழ்வதற்கு...

நீ இன்றி நானும் இல்லை...

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமா…வருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?

விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஓ..

நட்பு

"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்